தாச்சித் தொடரில் அம்பாள் சம்பியன்

நாவற்குழி சரஸ்வதி சனசமூக நிலையமும், விளை யாட்டுக் கழகமும் இணைந்து யாழ்ப்பாண மாவட்ட ரீதியாக நடத்திய தாச்சித் தொடரில், தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழக அணி சம்பியனாது.

சரஸ்வதி சன­ச­மூக நிலை­யத்­தின் திட­லில் அண்­மை­யில் இடம்­பெற்ற இறுதி ஆட்­டத்­தில் புது­ம­டம் வைகறை விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து தாவடி காளி அம்­பாள் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. 5:4 என்ற புள்­ளி­க­ளின் அடிப் ப­டை­யில் காளி அம்­பாள் அணி வெற்­றி­பெற்­றது. சிறந்த வீர­னாக தாவடி காளி அம்­பாள் அணி­யின் அகி­லன் தெரி­வா­னர். பரி­ச­ளிப்பு நிகழ்­வுக்கு முதன்மை விருந்­தி­ன­ராக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கஜ­தீ­பன் கலந்து கொண்­டார்.

You might also like