ஒழுங்­கை­க­ளில் கழி­வு­கள் வீசு­வ­தால் பொதுச் சுகா­தா­ரத்­துக்­குப் பங்­கம்

அச்­சு­வேலி மக்­கள் கவலை

அச்­சு­வே­லிப் பகு­தி­யில் உள்­ளூர் ஒழுங்­கை­கள் மற்­றும் அவற்­றின் சந்­தி­க­ளில் கழி­வு­கள் இர­வோடு இர­வாக கொட்­டப்­பட்டு வரு­கின்­றன. இத­னால் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு உள்­ளா­வ­தோடு பொதுச் சுகா­தா­ரத்­துக்­கும் பங்­கம் ஏற்­ப­டு­வ­தாக பொது மக்­கள் கவலை தெரி­வித்­த­னர்.

அச்­சு­வேலி பகு­தி­யில் முறை­கே­டான வகை­யில் கழி­வுப் பொருள் கொட்­டப்­ப­டு­கின்­றமை தொடர்­பாக பொது­மக்­கள் கூடும் இடங்­க­ளில் அவர்­க­ளின் பேசு­பொ­ரு­ளாக இருந்து வரு­கின்­றது. அத்­து­டன், அண்­மை­யில் அச்­சு­வேலி பொலிஸ் நிலை­யத்­தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லும் இது தொடர்­பான கருத்­துக்­கள் மக்­க­ளால் முன்­வைக்­கப்­பட்­டன.

அச்­சு­வேலி பகு­தி­யில் முறை­கே­டான விதத்­தில் கழி­வு­கள் பொது­மக்­கள் நட­மா­டும் இடங்­க­ளில் வீசப்­ப­டு­வது தொடர்­பாக வலி. கிழக்­குப் பிர­தேச சபை­யின் அச்­சு­வேலி உப அலு­வ­ல­கத்­தில் முறைப்­பா­டு­கள் செய்­யப்­பட்ட போதி­லும், எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

“குப்­பை­கள் அகற்­றும் நடை­மு­றை­யில் அட்­ட­வ­ணைப்­ப­டுத்­தப்­பட்ட முறை­மை­யின் பிர­கா­ரம் குறிப்­பிட்ட வீதி­கள், ஒழுங்­கை­கள் உள்­ள­டக்­கப்­ப­டு­வது தொடர்­பாக வலி. கிழக்கு பிர­தேச சபை பகி­ரங்­க­மாக அறி­வித்து அவற்றை அகற்ற முன்­வர வேண்­டும்” என்று பொது­மக்­கள் கோரு­கின்­ற­னர்.

You might also like