இராணுவத்தின் அழுத்தத்தை மீறி செயற்படுவாரா மைத்திரி?

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கேள்வி

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, இரா­ணு­வத்­தி­டம் இருந்து எழு­கின்ற அழுத்­தங்­களை மீறி காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் விவ­கா­ரத்­தில் செயற்­ப­டு­வாரா? என காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னா்­க­ளி­டம் ஜரோப்­பிய ஒன்­றிய பிர­தி­நி­தி­கள் கேள்வி எழுப்­பி­னர்.

“இல்லை அவ­ரால் அவ்­வாறு எத­னை­யும் செய்ய முடி­யாது” என காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னா்­கள் உறு­தி­யா­கப் பதி­ல­ளித்­த­னா் கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலய முன்றிலில் தொடர் போராட்­டத்­தில் ஈடுபட்டு வரும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­களைச் சந்­தித்த போதே ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் பிர­தி­நி­தி­கள் இவ்­வாறு கேள்வி எழுப்­பி­னா்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னா்­கள் 200 நாள்­கள் தொடர் போராட்­டத்­தில் ஈடுபடு­வது சாதா­ரண விட­ய­மல்ல. இந்த விட­யத்தைத் தொடர்ந்­தும் அவ­தா­னித்து வரு­கின்­றோம்.அர­சுக்கு ஜரோப்­பிய ஒன்­றி­யம் இது தொடர்­பில் அழுத்­தங்­களைக் கொடுத்து வரு­கி­றது.

தொடர்ந்­தும் அழுத்­தம் கொடுக்­கப்­ப­டும்” என்­றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் பிர­தி­நி­தி­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளி­டம் தெரி­வித்­த­னர்.

தமது உற­வு­கள் எவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­டார்­கள், எப்­போது எங்கு வைத்து ஒப்­ப­டைக்­கப்­பட்டு காண­ாமல் ஆக்­கப்­பட்­டார்­கள், இர­க­சிய முகாம்­கள் தொடர்­பான விட­யங்­கள் பற்றி காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் எடுத்­து­ரைத்­த­னர்.

அத்­தோடு ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யில் கொழும்­புக்கு இரண்டு வருட கால அவ­கா­சம் வழங்­கி­யமை, ஜரோப்­பிய ஒன்­றி­யத்­தால் ஜிஎஸ்பி வரிச் சலுகை மீண்­டும் வழங்­கப்­பட்­டமை தொடர்­பில் தங்­க­ளின் கடும் ஆட்­சே­ப­னை­யை­யும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னா்.

You might also like