பாட­சா­லைக் கல்வி நடை­மு­றையே  பட்­ட­தா­ரி­களை போராட்­டத்­தில் இறங்க வைத்­துள்­ளது.

வடக்கு அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவிப்பு

பல்­க­லைக்­க­ழ­கம் சென்று பட்­ட­தா­ரி­யாக வேண்­டு­மென்ற சிந்­த­னையே இவ்­வா­றான போராட்­டங்­க­ளுக்­குக் கார­ண­மாக உள்­ளது. தொழிற்­கல்­விக்கு முன்­னு­ரிமை கொடுக்­கா­மல் கலைத்­துறை, வணி­கத் துறை­க­ளில் பட்­டம் பெறு­வ­தி­லேயே குறிக்­கோ­ளா­கச் செயற்­பட்­ட­தால் தான் இந்த நிலை தோன்­றி­யுள்­ளது.

இவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன்.

நேற்­றுத் தென்­ம­ராட்சி கல்வி வல­யத்­தி­னால் ஒழுங்கு செய்­யப்­பட்ட ‘ தென்­ன­ருவி ‘ என்­னும் வர்த்­த­க­பாட ஆக்­கப் பொருள்­க­ளின் காட்­சிப்­ப­டுத்­தல் கூடங்­க­ளைத் திறந்து வைத்து உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஐந்­தாம் தரப் புல­மைப் பரி­சில் பரீட்­சை­யு­டன் ஆரம்­ப­மா­கும் பரீட்சை முறை­கள் பல்­க­லைக்­க­ழ­கம் வரை சென்று முடி­வ­டை­கின்­றன. தொழிற்­மு­றைக் கல்­வித் திட்­டம் நடை­மு­றை­யில் இல்­லா­த­தால் ஏற்­பட்ட விளை­வு­களை எதிர்­கொண்டு தற்­போது க.பொ.த. உயர்­தர வகுப்­பில் தொழில்­மு­றைக் கல்வி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதில் கற்­கும் மாண­வர்­கள் தாமா­கவே தொழில் முறை­களை ஆரம்­பித்­தால் வேலை­யில்­லாப் போராட்­டங்­கள் நின்­று­வி­டும்.

பட்­டம் பெற்­ற­தும் அரச வேலை கிடைக்­க­வேண்­டு­மென்ற எண்­ணம் மாண­வர் மத்­தி­யில் காணப்­ப­டு­கின்­றது. சுய­தொ­ழில் முயற்­சி­களை மேற்­கொள்ள எவ­ரும் முன்­வ­ரா­த­தால் இவ்­வா­றான நிலைமை காணப்­ப­டு­கி­றது. முன்­னைய காலத்­தில் படித்­த­வர்­க­ளா­யி­னும் சரி படிக்­கா­த­வர்­க­ளா­யி­னும் சரி அரச வேலையை நாடி ஓட­வில்லை.

தவற விடாதீர்கள்:  முகநூல் காதல்; காதலன், காதலி உயிரிழப்பு!

மாறாக தாமாக ஒவ்­வொரு தொழில்­களை ஆரம்­பித்து தமது வாழ்க்­கைக்­கு­குத் தேவை­யான நிதி ­வ­ளங்­க­ளைப் பெற்­றி­ருந்­த­னர். அரச வேலை­க­ளுக்­குச் செல்ல பலர் முன்­வ­ரா­த­தால் குறைந்த கல்­வித் தகை­மை­க­ளு­டன் வேலை வாய்ப்­புப் பெற்­ற­வர்­கள் உண்டு. அரச தொழி­லுக்­காக மதம் மாறி­ய­வர்­க­ளும் உண்டு. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­குக் கிடைத்த கோட்­டாக்­கள் மூலம் பலர் வேலை வாய்ப்­பு­க­ளைப் பெற்­றுள்­ள­னர்.

இன்­றைய காலத்­தில் போட்­டிப் பரீட்­சை­கள் நடத்தி வேலை வாய்ப்­புக்­களை வழங்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அரச தொழி­லுக்­குள் செல்­ல­ வேண்­டு­மென்ற அக்­க­றையே இதற்­குக் கார­ண­மா­கும்.

இன்­றைய நிகழ்­வா­னது மாண­வர்­க­ளைச் சுய­தொ­ழில் ஏற்­பா­டு­களை தாமா­கவே மேற்­கொள்­ளம் ஒரு உந்­து­சக்­தி­யா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது. தென்­ம­ராட்­சிக் கல்வி வல­யத்­தி­னால் மூன்­றா­வது வரு­ட­மாக வர்த்­த­கக் கண்­காட்சி நடத்­தப்­ப­டு­வது உண்­மை­யில் அனை­வ­ரும் பாராட்­டப்­ப­ட­வேண்­டிய விட­ய­மா­கும். இத­னால் மாண­வர்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­ட­வ­து­டன் எதிர்­கா­லத்­தில் சிறந்த தொழில் முயற்­சி­யா­
ளர்­க­ளாக பலர் மாறு­வார்­க­ளென்­பது எனது நம்­பிக்கை.

இவ்­வாறு ஒவ்­வொரு வல­யத்­தி­லும் வர்த்­தக பாடக் கண்­காட்­சி­களை நடத்­தி­னால் பல நூறு தொழில் முயற்­சி­ யா­ளர்­களை உரு­வாக்க முடி­யும். நான் ஒரு பட்­ட­தா­ரி­யாக இருந்­த­போ­தி­லும் அரச பணியை வேண்­டா­மென உத­றித் தள்­ளிச் சொந்த முயற்­சி­யில் ஈடு­பட்­ட­தால் தான் இன்­றைய மாகாண சபை­யில் அமைச்­ச­ராகி உள்­ளேன்.

தவற விடாதீர்கள்:  எயிட்ஸ் நோயால் 678 உயிரிழப்பு

இது என்­னால் மேற்­கொள்­ளப்­பட்ட தொழில் முயற்­சிக்­குக் கிடைத்த பயன் என்றே கூறு­வேன். அர­சி­ட­மி­ருந்து சம்­ப­ளம் பெறக்­கூ­டாது என நினைத்த எனக்கு மக்­கள் வழங்­கிய பதவி அரச சம்­ப­ளம் பெற வைத்­துள்­ளது -என்­றார்.

You might also like