கோவளம் கழகக் கிண்ணத்தை வென்றது அம்பாள் அணி

காரைநகர் கோவள விளையாட்டுக்கழகம் ஒரு தசாப்தத்திற்கு மேலாக தீபாவளி தினத்தை முன்னிட்டு நடத்தும் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியின் கிண்ணத்தை அம்பாள் அணி தட்டிக் கொண்டது.

2017ஆம் ஆண்டுக்கான போட்டிகள் கடந்த 1,2,3,5ம் திகதிகளில் கோவளம் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றன.

10 பந்து பரிமாற்றத்தை கொண்ட ஆட்டங்களில் 10 அணிகள் பங்குபற்றின. அவற்றில் இருந்து கோவளம் A, அம்பாள்,கோவளம் B,ஒளிச்சுடர் அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகின.

இறுதிப்போட்டி அம்பாள் விளையாட்டுக்கழகத்துக்கும் கோவளம்A அணிக்கும் இடையே நடைபெற்றன. அம்பாள் விளையாட்டுக்கழகம் 33 ஓட்டங்களால் வெற்றியை பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அம்பாள் அணி மயூரனின் 55 ஓட்டங்களின் உதவியுடன் 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 8இலக்குகளை இழந்து 95 ஓட்டங்களை பெற்றது. கோவளம் அணி சார்பாக கிருபாகரன் 5 இலக்குகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோவளம் அணி 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 62 ஓட்டங்களை பெற்று 33ஓட்டங்களால் கிண்ணத்தை இழந்தது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக அம்பாள் அணியின் மயூரன் தெரிவானார். தொடரில் அதிகூடிய ஓட்டங்களாக 111 ஓட்டங்கள் கோவளம்B அணி வீரர் செந்தூரனால் பெறப்பட்டது.

தொடரில் அதிக இலக்குகளாக 13 இலக்குகளைகோவளம் A அணி வீரர் வராகன் வீழ்த்தினார்.

3ஆம் இடத்தை ஒளிச்சுடர் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.

You might also like