பணம் பிடுங்கிய ஆசாமி சிக்கினார்

யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர், பொதுச் சேவை ஆணைக்­கு­ழு­வின் செய­லா­ளர் உள்­ளிட்­டோ­ரின் போலி­யான கையெ­ழுத்து மற்­றும் கடி­தத் தலைப்­புக்­க­ளைப் பயன்­ப­டுத்தி மோச­டி­க­ளில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் நேற்­றுக் கைது செய்யப்பட்டார்.

காணாமற்போனோரின் உறவினர்களைக் கண்டுபிடித்து தருவதாக பலரிடம் பல லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்று அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

‘வேலை வாய்ப்பு மற்றும் இடமாற்றம் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து சந்தேகநபர் பலரிடம் பணம் வாங்கியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலரின் கையெழுத்துப் போன்று கையெழுத்திட்டு, மாவட்டச் செயலகத்தின் போலிக் கடிதத் தலைப்பை அவர் பயன்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு, பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலரின் கையெழுத்துப் போன்று கையெழுத்திட்டு சிலரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார். காணாமற்போனோரின் உறவினர்களிடம், உறவுகளைக் கண்டு பிடித்துத் தருவதாகத் தெரிவித்து பல லட்சம் ரூபா பணத்தை சந்தேகநபர் பெற்றுள்ளார்.

இடமாற்றம் பெற்றுக் கொடுப்பதற்கு 4 லட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் அவர் பெற்றுள்ளார். இந்த விடயம் மாவட்டச் செயலருக்குத் தெரிய வந்தது. போலிக் கையெழுத்துடன் கடிதத் தலைப்பை பயன்படுத்தியமை தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டச் செயலர், எம்மிடம் முறைப்பாடு மேற்கொண்டிருந்தார்’ என்று யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

தவற விடாதீர்கள்:  தங்கம் கடத்த முயன்றவர் கைது

யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நேற்று முன்தினம் வாய்மொழி மூலமான முறைப்பாடு மேற்கொண்டதைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு அணியினர் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

பாசையூர் பகுதியில் வைத்து நேற்றுக் காலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்த தேசிய அடையாள அட்டையில், அவர் வவுனியா குருமன்காட்டைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் லோகநாதன் ரவீந்திரன் (வயது-59) எனவும் தெரிய வந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், பல லட்சம் ரூபா பணத்தை சந்தேகநபர் பலரிடம் பெற்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அத்துடன் மாவட்டச் செயலகத்தில் வேலை செய்வதாகப் பலரிடம் கூறி அவர் பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You might also like