நினைவேந்தலால் டெங்கு ஒழிப்பு ஒத்திவைப்பு

தேசிய அவ­சர டெங்கு ஒழிப்­புத் திட்­டத்தை வடக்கு மாகா­ணத்­தில் எதிர்­வ­ரும் 22ஆம்இ 23ஆம் திக­தி­க­ளில் முன்­னெ­டுக்­கு­மாறு வடக்கு மாகாண சுகா­தா­ரப் பணிப்­பா­ள­ருக்கு அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக, வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார்.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை குழப்­பும் வகை­யில், மே 18ஆம், 19ஆம் திக­தி­க­ளில் அவ­சர தேசிய டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு கொழும்பு சுகா­தார அமைச்­சால் அறி­வு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யி­லேயே, வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் அதனை மாற்­றி­யுள்­ளார்.

வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­த­தா­வது:

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்­தின் பின்­ன­ரும் டெங்கு நோய்த் தொற்­றின் தாக்­கம் இருப்­ப­தா­கச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அவ­ச­ர­மாக தேசிய டெங்கு ஒழிப்பை முன்­னெ­டுக்க கொழும்பு அரசு திட்­ட­மிட்­டது.

கொழும்பு அரசு இதனை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டுள்ள நாள்­கள், முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லின் இறுதி நாள்­க­ளா­கும். எமது மக்­கள், உயி­ரி­ழந்த தமது உற­வு­களை அஞ்­ச­லிக்­கும் நாளில் இவ்­வாறு தேசிய நிகழ்வை நடத்­து­வ­தில் இடை­யூறு காணப்­ப­டும் என்று கண்­ட­றி­யப்­பட்­ட­தால், இந்­தத் திக­தியை மாற்­று­மாறு கோரி­யுள்­ளேன்.

தவற விடாதீர்கள்:  கழி­வு­களை ஒரே நாளில் பச­ளை­யாக்­க நடவடிக்கை

வடக்­கில், மே 22ஆம் மற்­றும் 23ஆம் திக­தி­க­ளி­லேயே அவ­சர தேசிய டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டும் – என்­றார்.

You might also like