வேலைக்காரன் டிசம்பருக்குப் பிற்போடப்பட்டுள்ளது

செப்ரெம்பர் 29-ம் திகதி வெளியாகவிருந்த சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம், திடீரென்று தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’.

இந்தப்படம் செப்ரெம்பர் 29ம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் நேற்று இரவு படம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக மீண்டும் அறிவித்துள்ளனர்.

படம் தள்ளிப் போனதற்கு தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள காரணம்: ‘வேலைக்காரன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாலும், புதிய முறையில் தணிக்கைக்காக ஆன்லைனில் பதிவு செய்ய இருப்பதால் இதற்கு 3-4 வாரங்கள் தேவைப்படுகிறது.

நவம்பரில் எந்தொரு விழாக் கொண்டாட்டமும் இல்லை. ஆகையால் டிசம்பர் வெளியீடு மட்டுமே சரியாக இருக்கும் எனத் தேர்வு செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் தின விடுமுறையே சரி என்று விநியோகஸ்தர்களும் தெரிவித்ததால், டிசம்பர் 22-ம் திகதி வெளியிட முடிவு செய்திருக்கின்றனர்.

 

You might also like