20ஆவது திருத்தம் தொடர்பில் நீதிமன்ற முடிவு விரைவில்

அர­சி­னால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 20ஆவது திருத்­தச்­சட்ட வரைவு தொடர்­பான தமது தீர்­மா­னத்தை உயர் நீதி­மன்­றம் விரை­வில் அறி­விக்­க­வுள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 20ஆவது திருத்­தச்­சட்ட வரை­வுக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்­தில் 13 மனுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

உயர் நீதி­மன்ற தலைமை நீதி­ய­ர­சர் பிரி­ய­சாத் டெப், மற்­றும் நீதி­ய­ர­சர்­கள் அனில் குண­தி­லக, விஜித் மலல்­கொட ஆகி­யோ­ரைக் கொண்ட அமர்வு இந்த மனுக்­க­ளைப் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக் கொண்­டுள்­ளது.

இந்த நிலை­யில், 20ஆவது திருத்­தச்­சட்ட வரைவு குறித்து உயர் நீதி­மன்­றத்­தின் முடிவு சபா­நா­ய­க­ருக்­கும், அரச தலை­வ­ருக்­கும் விரை­வில் அனுப்பி வைக்­கப்­ப­டும் என்று தெரி­ய­வ­ரு­கி­றது.

You might also like