புதிய படத்தில் நாயகனாக நடிக்க சிம்பு ஒப்பந்தம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிம்பு, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம், தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அதில் நடிக்க பல்வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இறுதியாக ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருமே அடுத்த மணிரத்னம் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்தார்கள்.

நடிகர்களாக நானி, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மணிரத்னம். இதில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இந்தநிலையில், இந்தப்படத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது.

விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்தப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது

You might also like