கிம் ஜோங்கின் சொத்துக்களை முடக்குவதற்கு ரஷ்யா எதிர்ப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ரஷ்யா மற்றும் சீனாவால் ஏற்றுக்கொள்ளப்படாததை அடுத்து அவற்றுக்கு விலக்கு வழங்கி வடகொரியாவின் மீது கூடுதல் தடைகளை விதித்தது ஐக்கிய நாடுகள் சபை.

பன்னாட்டு சட்டதிட்டங்களை மீறி வடகொரியா அண்மையில் ஏவுகணைச் சோதனையொன்றை நடத்தியது. இந்த ஏவுகணை ஜப்பானுக்கு மேலாகப் பறந்தது.

ஒரு நாட்டின் வான்பரப்புக்கு மேலாக மற்றொரு நாடு ஏவுகணைச் சோதனைகளை அதன் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.

எனவே இது பன்னாட்டுச் சட்டத்தை மீறிய செயல் என்று தெரிவித்து கடும் கொதிப்படைந்தது ஐக்கிய நாடுகள் சபை. வடககொரியா அண்மையில் ஐதரசன் குண்டுச் சோதனையையும் நடத்தியது.

இந்தச் சோதனையின்போது 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இதனால் வடகொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு நேற்றுமுன்தினம் கூடியது ஐக்கிய நாடுகள் சபை. வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா சில தீர்மானங்களைக் கொண்டு வந்தது.

அதில் பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை வடகொரியாவுக்கு கொண்டு செல்வதற்கு தடை, வடகொரியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்-க்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்களை முடக்குவது மற்றும் அவர் பயணம் செய்வதற்கு தடை ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

வடகொரியாவின் பெரும்பாண்மையான எண்ணெய் தேவையை ரஷ்யா மற்றும் சீனா பூர்த்தி செய்து வரும் நிலையில் இந்த இரண்டு நாடுகளும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்குமா? அல்லது வாக்களிக்காமல் புறக்கணிக்குமா? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

எதிர்பார்க்கப்பட்டதைப் போல் ரஷ;யா மற்றும் சீனா ஆகியன வடகொரியாவுக்கு எரிபொருள் ஏற்றுமதியை முடக்கும் திட்டத்துக்கும், வடகொரிய அதிபரின் வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்கும் திட்டத்துக்கும் எதிராக வாக்களித்தன

You might also like