அமெரிக்கா மிகப்பெரும் துயரத்தைச் சந்திக்கும் – கிம் ஜோங் உன் 

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்காக அமெரிக்கா பெரும் துயரத்தைச் சந்திக்கும் என்று அமெரிக்கா அதன் வரலாற்றில் பெரும் துயரத்தைச் சந்தித்த நாளான (இரட்டைக் கோபுரத் தகரப்பு) நேற்றுமுன்தினம் எச்சரிக்கை விடுத்தார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்.

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகளை முடக்கும் விதத்தில் அமெரிக்கா அந்த நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில் இவ்வாறு எச்சரித்தார் கிம் ஜோங் உன்.

‘வடகொரியா அணுஆயுத வல்லரசு நாடாக மாறியிருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் எங்கள் நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.

நாங்கள் எடுக்கும் நடவடிக்கையால் அமெரிக்கா பெரும் துயரத்தையும் வேதனையும் சந்திக்க நேரிடும். அமெரிக்காவை அழிக்கவும் தயங்கமாட்டோம்’ என கிம்மின் எச்சரிக்கைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like