அமெரிக்காவை எவரும் அசைத்துவிட முடியாது

11-9 நிகழ்வில் ட்ரம்ப் முழக்கம்

அமெரிக்காவை எவராலும் அச்சுறுத்தவோ அல்லது அசைத்துப் பார்க்கவோ முடியாது என்று தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அல் குவைதா ஆயுததாரிகளால் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட தினமான நேற்றுமுன்தினம் (9-11 நிகழ்வு) அமெரிக்காவெங்கும் பரவலாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘அமெரிக்காவை எவராலும் அச்சுறுத்த முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். உலகில் உள்ள எந்த சக்தியாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என்று ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11ஆம் திகதி நான்கு வானூர்திகளைக் கடத்திய அல் குவைதா ஆயுததாரிகள் இரண்டை உலக வர்த்தக மையமான நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுரத்தின் மீது மோதச் செய்தனர். இரண்டு கட்டடங்களும் சீட்டுக்கட்டாகச் சரிந்தன.

மற்றொரு வானூர்தியால் அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் மீது மோதிக் தாக்குதல் நடத்தப்பட்டது.

பிறிதொரு வானூர்தியால் வெள்ளை மாளிகையைத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது என்றும் ஆனால் வானூர்திக்குள் இருந்த நாட்டுப்பற்றுமிக்க மக்களால் அது தடுக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 997 அப்பாவிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like