தேசியமட்ட குத்துச் சண்டையில் வடக்குக்கு எட்டுப் பதக்கங்கள்

இலங்கை பாட­சா­லை­கள் குத்­துச் சண்­டைச் சங்­கம் நடத்­திய தேசி­ய­மட்­டத் தொட­ரில் வடக்கு மாகா­ணத்­துக்கு 5 தங்­கப்­ப­தக்­கம், ஒரு வெள்­ளிப் பதக்­கம், 2 வெண்­க­லப் பதக்­கம் என்று மொத்­த­மாக எட்­டுப் பதக்­கங்­கள் கிடைத்­துள்­ளன.

முல்­லைத்­தீவு முள்­ளி­ய­வளை வித்­தி­யா­னந்­தக் கல்­லூ­ரி­யில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தொடக்­கம் ஞாயிற்­றுக் கிழமை வரை இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. முள்­ளி­ய­வளை வித்­தி­யா­ னந்­தக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த சாம்­சன் 37-–40 கிலோ எடைப்­பி­ரி­வில் தங்­கப்­ப­தக்­கத்­தை­யும், தனு­சன் 50-–56 கிலோ எடைப்­பி­ரி­வில் (17-–18 வய­துப் பிரிவு) தங்­கப் பதக்­கத்­தை­யும், கிரி­த­ரன் 60-–64 கிலோ எடைப்­பி­ரி­வில் (17-–18 வய­துப்­பி­ரிவு) தங்­கப் பதக்­கத்­தை­யும், ஜென­னன் 56-–60 கிலோ எடைப்­பட்ட பிரி­வில் (17-–18 வய­துப்­பி­ரிவு) தங்­கப் பதக்­கத்­தை­யும் வென்­ற­னர்.

முத்­தை­யன்­கட்டு இட­து­கரை அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­ச­ாலை­யைச் சேர்ந்த தமி­ழ­ர­சன் 37-–40 கிலோ எடைப்­பி­ரி­வில் (15-–16 வய­துப்­பி­ரிவு) தங்­கப் பதக்­கத்­தை­யும், முத்­தை­ யன்­கட்டு வல­து­கரை அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­ச­சாலை­யைச் சேர்ந்த றூபன் 46-–50 கிலோ எடைப்­பி­ரி­வில் (15-–16 வய­துப்­பி­ரிவு) வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், பருத்­தித்­துறை ஹாட்­லிக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த மதி­வா­ணன் 52-–56 கிலோ எடைப்­பி­ரி­வில் (19 வய­துப் பி­ரிவு) வெண்­க­லப் பதக்­கத்­தை­யும், வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­ ல­யத்­தைச் சேர்ந்த பிர­தீ­பன் 39-–40 கிலோ எடைப் பி­ரி­வில் (13-–14 வய­ துப்­பி­ரிவு) வெண்­க­லப் பதக் கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

You might also like