துறையூர் ஐயனார் சம்பியன்

புங்குடுதீவு சித்­தி­வி­நா­ய­கர் சன­ச­மூக நிலை­யத்­தி­ன­தும், சண்ஸ்­ரார் விளை­யாட்­டுக் கழ­கத்­தி­ன­தும் 50ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் துறை­யூர் ஐய­னார் அணி சம்­பி­ய­னா­னது.

சண்ஸ்­ரார் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் அண்­மை­யில் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் ஊர்­கா­வற்­றுறை சென். ஜேம்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து துறை­யூர் ஐய­னார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

ஐய­னார் அணி­யின் வீரன் கோகு­லன் முதல் பாதி­யில் தனது அணி­யின் சார்­பாக 4 கோல்­களை அடுக்­கி­னார். கோகு­லன் எதிர் சென். ஜேம்ஸ் என்­ற­வா­றாக அமைந்­தது ஆட்­டம். முதல் பாதி­ யின் முடி­வில் 4:0 என்ற கோல் கணக்­கில் ஐய­னார் அணி முன்­னிலை வகித்­த­போது முடி­ வுக்கு வந்­தது முதல் பாதி.

இரண்­டாம் பாதி ஆட்­டத்­தி­லும் துறை­யூர் ஐய­னார் விளை ­யாட்­டுக் கழக அணி 4 கோல் களைப் பதிவு செய்­தது. கோகு­லன் இரண்டு கோல்­க­ளை­யும், சுப­ராஜ் இரண்டு கோல்­க­ளை­யும் பதி­வு­செய்­த­னர். சென். ஜேம்ஸ் அணி­யின் சார்­பாக பதி­வான கோலை றெமில்­டன் பதி­வு­செய்­தார். முடி­வில் 8:1 என்ற கோல் கணக்­கில் அபார வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்றது ஐய­னார் அணி. ஆறு கோல்­க­ளைப் பதி­வு ­செய்த கோகு­லன் ஆட்­ட­நா­ய­கனா ­கத் தெரி­வு­செய்­யப்­பட்­டார்.

You might also like