ஹிங்கிஸ் – சான் யுங் இணை சம்பியனானது

அமெரிக்க ரென்னிஸ் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் மார்டினா ஹிங்கிஸ் – – சான் யுங் இணை கிண்ணம் வென்றது.

பன்னாட்டு அந்தஸ்து பெற்ற அமெரிக்கப் பகிரங்கத் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதியாட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சுவிற்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் மற்றும் தைவானின் சான் யுங் இணை, செக் குடியரசின் லூசி ரடேக்கா மற்றும் கட்ரினா சினியகோவா இணையை எதிர்கொண்டது.

மூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தின் முதல் இரண்டு செற்களையும்
முறையே 6:3, 6:2 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றிய ஹிங்கிஸ் –
சான் யுங் இணை 2:0 என்ற நேர் செற் கணக்கில் கிண்ணம் வென்றது.

You might also like