நீண்ட கால்களை உடையவராக ரஷ்யப் பெண் சாதனை

ரஷ்யாவைச்  சேர்ந்த 29 வயதுடைய மாடல் அழகி எகதேரினா லிஸினா , உலகின் நீண்ட கால்கள் உடைய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
6 அடி, 8.77 அங்குல உயரமுள்ள, எகதேரினாவின், வலது கால்  132.8 செ.மீ. இடது கால், 132.2 செ.மீ.  நீளம் உடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகதேரினாவுக்கு முன், ரஷ்யாவைச் சேர்ந்த, ஸ்வெட்லனா பாங்க்ரடோவா, உலகின், நீளமான கால்கள் உடைய பெண் என் சாதனையை பெற்றிருந்தார். அவரது கால்கள், 132 செ.மீ. நீளம் உடையவை.
எகதேரினா  2008ல், சீனத் தலைநகர், பீஜிங்கில் நடந்த, ஒலிம்பிக் போட்டி, கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் ரஷ்யா சார்பில் பங்கேற்று வெண்கலம் வென்றவர்.
 

 

You might also like