கத்தி காட்டி மிரட்டப்பட்டதால் வீதியில் மயங்கி விழுந்த மாணவிகள்!!

பாடசாலைக்குச் சென்ற மாணவிகளை கத்தியை நீட்டிப்  பயமுறுத்திய  குழுவினரைப் பார்த்த மாணவிகள்   வீதியில் மயங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் மஸ்கெலிய, காட்டுமஸ்கெலியா தோட்டம் லெங்கா பிரிவில் இன்று காலை நடந்தது.

மயக்கமுற்ற மாணவிகளை  சாலையில் சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களில் 8 மாணவிகளுக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கறுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருந்த  சிலர் மாணவிகளை மிரட்டினர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You might also like