வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் பன்னாட்டு உளநல தினம்

பன்னாட்டு உளநல தினம்  ஒக்டோபர் 10 திகதி பன்னாட்டளவில் கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த வருடம் ‘ மனம் விட்டுப் பேசுவோம் மகிழ்வாக இருப்போம் ‘ என்ற மகுட வாசகத்தின் கீழ் வவுனியா விபுலாந்தாக் கல்லூரியில் ஒரு மாத காலத்திற்கு இந்தத்தினத்தை முன்னிட்டு உளவல நடவடிக்கைகள் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இன்றும் காலை 7.30 மணியளவில் அதிபர் திரு. சுப்பையா அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் உளநல செயற்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் சிறப்புரையை ‘ மனம் விட்டுப் பேசுவோம் மகிழ்வாக இருப்போம்’ என்ற தலைப்பில் வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் சிறப்புரை நிகழ்த்தினார் .

You might also like