காஜல் அகர்வாலாக மாறிய குடும்பப் பெண் : கணவன் பேரதிர்ச்சி!

குடும்ப அட்டைக்குப் பதிலாக தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பல குழப்பங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஆர்.சி.செட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சரோஜா ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

பல நாள்களுக்குப்பின் குடும்ப அட்டை வந்தது. அதில் தனது மனைவி சரோஜா புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு வேறு புகைப்படம் மாறி விட்டது.

புது அட்டை வரும் வரையில் இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி இருகின்றனர்.

இதனால் மக்கள் தமது விசனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

 

You might also like