சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு – காத்தான்குடி கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்புக்கான வகுப்பறைக்கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நேற்றுக் காலை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வகுப்பறைக் கட்டடத்துக்காக 15 லட்சம் நிதியும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்காக 8.8 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் உள்ளிட்டவர்களுடன் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

You might also like