பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு அரம்பம்

கிழக்கு பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது பன்னாட்டு ஆராய்ச்சி  மாநாடு திருகோணமலை கோனேஷபுரியில் அமைந்துள்ள வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
வளாக முதல்வர் மருத்துவர், வீ.கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற  இம் மாநாட்டில் 66 ஆய்வு கட்டுரைகள் மற்றும் துறைசார் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படவுள்ளது.
 வேலையில்லா பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான காரணங்கள் மற்றும் சமகால சமூக கலாச்சார பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் ஆரம்பமான இம் மாநாடு நாளை நிறைவு பெற இருப்பதுடன் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு ஆய்வாளர்களும் இதில் பங்கு பற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்படகிறது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவும் சிறப்பு அதிதியாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா -கிழக்கு பல்கலைக்கழக பிரதி துணைவேந்தர் மரத்துவர் கருணாகரன் உட்பட உயரதிகாரிகள் எனப்  பலரும் கலந்து கொண்டனர்.

You might also like