சிறு­கைத்தொழில் முயற்­சி­கள் ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டும்

சமீ­பத்­தில் சிங்­கப்­பூர் வெளி­வி­வ­கார அமைச்­சர் யாழ். வந்­த­போது கூறி­னார், ‘‘யாழ்ப்­பா­ணத்­த­வர்களது திறமை வெளி உல­கி­ன­ருக்­குப் பயன்­பட்­டது போதும்; இனி உங்­க­ளுக்­காக உங்­கள் திற­மை­க­ளைப் பயன்­ப­டுத்தி முன்­னே­றுங்­கள்” என்று.

கூடவே சிங்கப்­பூ­ரின் வளர்ச்­சி­யில் யாழ­வர் உழைப்­பை­யும் வியக்­கத் தக்க வகை­ யில் உள்ளது என்று தெரிவித்து எம்­மைப் பெரு­மைப்­பட வைத்­தார். ஆனால் எமது திற­மையை அல்­லா­மல், மற்­ற­வர்­க­ளின் திற­மை­யான, பய­னுள்ள முயற்­சி­களை, செயற்­பா­டு­ க­ளைக் கூட நாம் பயன்­ப­டுத்தி முன்­னேற வக்­கற்­ற­வர்­க­ளாகி நிற்­கி­
றோம். கண்­ணுக்­கெட்­டிய தூரத்து தமிழ்­நாட்­டுச் சிறு கைத்­தொ­ழி­லா­ளர்­கள் கையா­ளும் உத்­தி­களை, இல­கு­வில் கிடைக்­கும் மூலப்­பொ­ருள் களைக் கொண்டு மீள் சுழற்சி அடிப்­ப­டை­யில் சில உற்­பத்­தி­களை நாம் மேற்­கொள்ள முடி­யும்.

உதா­ர­ண­மாக, ‘காட்­போட்’ மற்­றும் கட­தாசி, பழைய பத்­தி­ரி­கை­களை தமிழ் நாட்­ட­வர்­கள் தேடித்­தேடிப் பெறு­கி­றார்­கள். எனக்­குத்­தெ­ரிந்து 2010 ஆம் வரு­டம் ஒரு கிலோ காட்­போட் (பிஸ்­கற். மாப்­பெட்டி போன்­றவை வைக்­கப்­ப­டும் அட்­டை­கள்) இந்­திய ரூபா­யில் பத்து ரூபா. தற்­போது விலை அதி­க­ரித்­தி­ருக்­கும். பழைய பேப்­பர் ஒரு­கிலோ 3ரூபா. இவற்­றைச் சேக­ரித்து மீள் சுழற்­சி­
யில் பயன்­ப­டுத்­து­கின்­றார்­கள்.

பெரும் வியா­பா­ர­மா­கக் கூடப் பார்த்­துள்­ளேன் ஆனால் இங்கோ ‘காட்­போட் ’கடை வீதி­க­ளில் வீசப்­பட்டு வீணா­கி­றது. இதைவிட, வெயில் காலங்­க­ளில் மோர் பைக்­கற்­று­க­ளில் அடைக்­கப்­பட்டு (இங்கு யூஸ்­போல) ஒரு பை 2 ரூபா­வுக்­குக் கிடைக்­கி­றது. பொலித்­தீன் பாவ­னைக்கு ஈடாக துணிப்­பை­கள் உற்­பத்தி, ஆடை உற்­பத்­தி­பற்றி கூறத் தேவை­யில்லை. மற்­றும் பல அன்­றா­டப் பாவ­னைப் பொருள்­க­ளைத் தயா­ரித்து குறைந்த விலை­யில் விற்­கின்­ற­னர்.

கூடவே உள்­ளூர் வேலை வாய்ப்­பும் கிடைக்­கி­றது. ஆனால் இங்கோ வேலை­யற்­றுப் பலர் வாடுகின்றனர். தொழில் முயற்சி ஆர்­வ­லர்­க­ளைத் தமி­ழ­கம் அழைத்­துச் சென்று பயிற்சி தர சம்பந்தப்பட்டோர் முன்­வர வேண் டும் போர் என்­று­போன காலம் போகட்­டும். இனி­யா­வது சுய­பொ­ரு­ ளா­தா­ரத்தை வளர்ப்­போம்

வடபுலத்தான்

You might also like