பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் கண்டன ஊர்வலம்

யாழ். மாநகர சபையின் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஐவரின் பணி இடைநிறுத்தத்தைக் கண்டித்து பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் கண்டன ஊர்வலத்தில்  ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் பணியாற்றியவேளையில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்ட இடமாற்றத்தினைக் கண்டித்தும் இவ்வாறு தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ஐவருக்கும் தொடர்ந்தும் மாநகரசபையிலேயே பணியாற்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே நேற்றை தினம் குறித்த கண்டன ஊர்வலம்  பண்ணைத் தொலைத்தொடர்பு நிலையம் முன்பாக ஆரம்பமாகி வட மாகாண சுகாதார அமைச்சின் செயலகம் வரையில் இடம்பெற்றது.

You might also like