Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மின்சார சபை ஊழியர்கள் சேவைப் புறக்கணிப்பு

வடமாகாணப் பிராந்திய முகாமையாளர் அலுவலத்தில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் கற்பூரம் கொழுத்தியும் தேங்காய் உடைத்தும் தமது எதிர்ப்பினையும் கண்டனத்தினையும் வெளியிட்டனர்.

வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றாமை, சம்பள முரண்பாட்டினைச் சரி செய்யத் தவறியமை, 2015 ஆம் வருட முறைகேடான சம்பளக் கொள்ளை,  ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இரண்டு நாட்கள் தொடர்ச்சியான சேவைப் புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இரண்டு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவின் மீண்டும் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.