விஜய் சேதுபதியின் “தியாகராஜன் குமாரராஜா” முன்னோட்டம்

தியாகராஜன் குமாரராஜா படத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் கதாபாத்திரத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கினார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வந்த இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் பி.எஸ்.வினோத்.

இந்தப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. சமந்தா தனது கதாபாத்திரத்தின் லுக்கை, ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது அக்கதாபாத்திரத்தின் முன்னோட்டத்தைத் தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 

You might also like