2018 ஆ ம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட உரை நவம்பரில்

2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரை எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒதுக்கீட்டு சட்டவரைபின் 2ஆம் வாசிப்பின் மீதான விவாதம் நவம்பர் மாதம் 10, 11, 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஒதுக்கீட்டு சட்டவரைபின் 3ஆம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக உத்தேச நிகழ்ச்சி நிரலை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

இதனை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

You might also like