மகிந்த ராஜபக்சவையும் நீதிமன்றில் நிறுத்தலாம் – ராஜித சுட்டிக்காட்டு

சில் துணி விநியோகத்துக்கு உத்தரவிட்டமை, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை ஆகிய குற்றங்களுக்காக முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீதும் வழக்குகளைத் தொடுக்க முடியும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன.

அவர் தெரிவித்தாவது-

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச காலத்தில் இடம்பெற்ற சில் துணி (பௌத்த பக்தர்கள் அணியும் வெள்ளை நிற உடை) பகிர்ந்தளிக்கும் விவகாரம் தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. ஆனால் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்காக பிரசுரிக்கப்பட்ட அவரின் புகைப்படம் அடங்கிய தாள் ஒன்றும் சில் துணிகளுடன் வைக்கப்பட்டிருந்தது என்பதே உண்மையாகும்.

தற்போது தானே உத்தரவிட்டேன் என வீரியம் பேசுகின்ற முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீது எவரேனும் வழக்குத் தொடர்ந்தால் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் நீதிமன்ற அவதூறு வழக்கையும் அவர் மீது தொடர முடியும்.- என்றார்.

You might also like