வெள்ளைப் பணியாரம்

தேவையான பொருள்கள்:

பச்சரிசி -1 கப்
உளுந்து – 25 கிராம்
உப்பு – சிறிதளவு
எண்ணெய்

செய்முறை:

பச்சரிசி, உளுந்தை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.இரண்டையும் சேர்த்து  தோசை மாவு பதத்தை விட இளகலாக அரைக்கவும்.  உப்பு சேர்க்கவும்.  இப்போது பணியார மாவு ரெடி.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறு கரண்டியால் எடுத்து எண்ணெயில் ஊற்றவும். பணியாரத்தை ஒரு புறம் திருப்பிப் போட்டு பொன் நிறமாக எடுக்கவும்.

மென்மையாக  இல்லாவிட்டால் சிறிதளவு தண்ணீரில் ஒரு துளி அப்ப சோடா மாவு போட்டு ,மாவை நன்கு கரைத்துக் கொண்டு பணியாரம் ஊற்றவும்.

தவற விடாதீர்கள்:  டெவல் மீன்

You might also like