அப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகங்கள்!!

அப்பிள் ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் வொட்ச் 3, ஆப்பிள் டிவி 4K, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு திட்டமாக இருந்த அப்பிள் ஸ்பேஸ் ஷிப் வளாகத்தின் முதல் விழாவில் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் ஐபோன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அப்பிள் வொட்ச் 3:

புதிய அப்பிள் வொட்ச் 3 பில்ட்-இன் செல்லுலார் கனெக்டிவிட்டி, மெசேஜஸ் மற்றும் சிரி வசதி கொண்டுள்ளது. அப்பிள் வொட்ச் 3 அப்பிள் ஏர்பாட்ஸ் உதவியுடன் பாடல்களை இசைக்கும் திறன் கொண்டுள்ளது. அளவை பொறுத்த வரை அப்பிள் வொட்ச் 2 போன்றே காட்சியளிக்கும் அப்பிள் வாட்ச் 3 முதல் முறையாக சிரி பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அப்பிள் W2 சிப்செட் கொண்டுள்ள அப்பிள் வொட்ச் ஒஎஸ் 4, அப்பிள் வாட்ச் வாடிக்கையாளர்களுக்கு செப்ரெம்பர் 19 ஆம் திகதி முதல் கிடைக்கும்.

பல்வேறு நிறங்களில் கிடைக்கும் அப்பிள் வொட்ச் 3 செப்டம்பர் 15 ஆம் திகதி முன்பதிவு ஆரம்பித்து வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. புதிய வொட் 3 செல்லுலார் மொடல் விலை 399 டொலரில் இருந்து ஆரம்பிக்கும் நிலையில் செல்லுலார் வசதியில்லா மொடல் விலை 329 டொலர் முதல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

அப்பிள் டிவி 4K:

அப்பிள் வொட்ச் 3 சாதனத்தை தொடர்ந்து புதிய அப்பிள் டிவி 4K எச்.டி.ஆர். டிவியும் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அப்பிள் டிவி எச்.டி.ஆர். வசதியுடன் டால்பி தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய அப்பிள் டிவியை விட இருமடங்கு வேகத்தில் புதிய 4K டிவி இயங்கும் என்பதோடு 4K திரைப்படங்களின் விலை எச்டி விலையிலேயே வழங்கப்படும்.

அப்பிள் டிவி 4K விளையாட்டு போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பும் வசதி கொண்டிருக்கிறது. புதிய அப்பிள் டிவி 4K பிரத்தியேக ஸ்போர்ட்ஸ் செயலி வசதி கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான கேம்களையும் வழங்குகிறது. அப்பிள் டிவி செப்டம்பர் 15 ஆம் திகதி முன்பதிவு ஆரம்பித்து செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

அப்பிள் டிவி 4K 32 ஜிபி மாடல் விலை 179 டொலர்களும், 64 ஜிபி மொடலின் விலை 199 டொலர் முதல் ஆரம்மாகின்றது.

 

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்:

புதிய ஐபோன் 8 சீரிஸ் 4.7 மற்றும் 5.5 இன்ச் திரை கொண்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன்களில் வழங்கப்படாத அளவு ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே மற்றும் அதிக உறுதியான ஹோம் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் முன்பை விட வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது.

அப்பிள் A11 பயோனிக் சிப் கொண்டுள்ள புதிய ஐபோன் 8 சீரிஸ் இதுவரை வெளியானதில் அதிக சக்திவாய்ந்த ஐபோன் ஆகும். இவை முந்தைய ஐபோன்களை விட நீண்ட நேர பற்றரித் திறனைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கெமராவும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கமரா வழங்கப்பட்டுள்ளது

புதிய ஐபோன் 8 கமராக்கள் குறைந்த வெளிச்சத்திலும் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டுள்ளன. ஐபோன் 8 சீரிஸ் எந்த ஸ்மார்ட்போனும் வழங்காத அளவு துல்லியமான வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் அக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 8 ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

You might also like