தமிழில் வெளிவருகிறது த மம்மி

எகிப்பது பிரமிட்டுகளில் கண்டெடுக்கப்பட்ட மம்மிகளை மையமாக வைத்து மம்மி, மம்மி ரிட்டன்ஸ் என இரண்டு படங்கள் வெளிவந்தது. இரண்டுமே பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது மம்மியை மையமாக கொண்டு தி மம்மி என்ற பிரமாண்ட கொலிவூட் படம் தயாராகி உள்ளது. கொலிவூட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடித்திருப்பதால் உலகம் முழுவதும் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
த ஐலேண்ட், த லெஜண்ட் ஆப் சீரோ, மிசன் இம்பாசிபிள், டிரான்ஸ்பார்மர், ஸ்பைடர் மேன், உள்ளிட்ட பிரபலமான கொலிவூட் படங்களை இயக்கிய அலெக்ஸ் குட்ஸ்மென் இயக்கி உள்ளார். டாம் குரூசுடன் ஷோபியா பெத்தல்லா, அனெபிள் வாலிஸ், ஜாக் ஜான்சன், ருசல் க்ரோவ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ப்ரைன் டெய்லர் இசை அமைத்துள்ளார், பென் செர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேறாத ஆசைகளுடன் ஒரு எகிப்து இளவரசி உயிருடன் புதைக்கப்படுகிறாள். அந்த மம்மி பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்படுகிறது. அதை தோண்டி எடுத்து ஆராய்ச்சிக்காக எடுத்து வருகிறார்கள். வருகிற வழியில் விமானம் விபத்துக்குள்ளாகிறது. மம்மி உடைந்து அந்த இளவரசி மீண்டும் உயிர் பெறுகிறாள் ஆயிரம் ஆண்டுகளாக மனதில் இருந்த ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கிறாள். அதை எப்படி டாம் குரூஸ் தலைமையிலான குழுவினர் முறியடித்து மம்மியை கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் என்பதுதான் கதை.
உலகம் முழுவதும் எதிா்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி வெளிவருகிறது. இந்தியாவில் யுனிவர்செல் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. தமிழில் ஹன்சா பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழில் டப் செய்து வெளியிடுவதோடு 3டி, ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளியிடுகிறார்கள்.

You might also like