தமிழரசுவின் மையக் குழு செப். 23இல் கூடுகிறது

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டம் எதிர்­வ­ரும் 23ஆம் திகதி அம்­பா­றை­யில் நடை­பெ­ற­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வை­யில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி பங்­கேற்­ப­தில்லை என்று அந்­தக் கட்­சி­யின் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் தீர்­மா­னித்­தி­ருந்­த­னர்.

இந்­தத் தீர்­மா­னத்தை அங்­கீ­க­ரிக்­கு­மாறு கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டத்துக்கு அனுப்­பி­யி­ருந்­த­னர்.

கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டம் கடந்த மாதம் நடத்­து­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்­த­போ­தும் அது பின்­னர் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. இரண்டு தட­வை­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்ட இந்­தக் கூட்­டம் எதிர்­வ­ரும் 23ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like