வவுனியா இந்துக்கல்லூரியில் முதியோர் விழிப்புணர்வு நிகழ்வு

2017ஆம் ஆண்டிற்கான வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் முதியோர் விழிப்புணர்வு செயல் திட்டம் இன்று வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் ரி. பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்ற முதியோர் விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் பங்கு கொண்டனர் .

‘ மூத்தோர்வாக்கும் முழுநெல்லிக்காயும்’ என்ற தலைப்பில் மாவட்ட சமூகசேவைஉத்தியோகத்தரும் இலக்கியப் பேச்சாளருமான இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாஸன் சிறப்புரை நிகழ்த்தினார் .

You might also like