வல்­லி­புர ஆழ்­வார் வருடாந்தத் திருவிழா புதனன்று ஆரம்­பம்

வர­லாற்­றுச்­சி­றப்பு மிக்க வட­மா­ரட்சி ஸ்ரீ வல்­லி­புர ஆழ்­வார் ஆலய வரு­டாந்த பெரும் திரு­விழா நாளைமறுதினம் புதன்­கி­ழமை காலை 10 மணிக்கு கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­பாகி 17 தினங்­கள் நடை­பெற உள்­ளது.

எதிர்­வ­ரும் 26ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை 7ஆம் திரு­விழா வரை சுவாமி உள்­வீதி உலா­வும், 27ஆம் திகதி புதன்­கி­ழமை முதல் அடுத்­த­மா­தம் 6ஆம் திகதி வரை சுவாமி வெளி­வீதி உலா­வும் இடம்­பெ­றும்.

முக்­கிய திரு­வி­ழாக்­க ­ளான குருக்­கட்டு விநா­ய­கர் தரி­ச­னம் 27ஆம் திகதி புதன்­கி­ழ­மை­யும், வெண்­ணைய்த்­தி­ரு­விழா 28 ஆம் வியாழக்­கி­ழ­மை­யும், துகில் திரு­விழா 29 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மை­யும், பாம்­புத்­தி­ரு­விழா 30 ஆம் திகதி சனிக்­கி­ழ­மை­யும், ஹம்­சன் போர் திரு­விழா அடுத்த மாதம் முதலாம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யும், வேட்­டைத்­தி­ரு­விழா 2 ஆம் திகதி திங்­கட்­கி­ழ­ மை­யும், சப்­ப­றத்­தி­ரு­விழா 3 அம் திகதி செய்­வாய்க்­கி­ழ­மை­யும், தேர்த்­தி­ரு­விழா 4 ஆம் திகதி புதன்­கி­ழ­மை­யும், சமுத்­தி­ரத்­தீர்­தத்­தி­ரு­விழா 5ஆம் திகதி வியா­ழக்­கி­ழ­மை­யும், கேணித்­தீர்த்­தி­ரு­விழா 6ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மை­யும் நடை­பெற உள்­ளன. அன்­றைய தினம் மாலை 5 மணிக்கு கொடி இறக்­கத்­து­டன் பெரும் திரு­விழா நிறை­வு­பெ­றும்.

வடக்கு வெளி­வீ­தி­யில் சுவாமி உலா­வ­ரும் போது கற்­கோ­வ­ளம் அற­நெ­றிப் பாட­சாலை மாண­வர்­கள் பங்­கேற்­கும் நிகழ்ச்சி ஒன்று அந்­நாள் திரு­விழா கருத்தை சித்­த­ரிக்­கும் முறை­யில் இடம்­பெ­றும். பெரும் திரு­வி­ழா­வின் பகல் திரு­விழா காலை 8 மணிக்­கும் இர­வுத்­தி­ரு­விழா மாலை 4.30 மணிக்­கும் தின­மும் ஆரம்­பா­கும்.

பெரும் திரு­விழா காலத்­தில் பருத்­தித்­துறை – மந்­திகை ஊடாக வல்­லி­பு­ர­கோ­யில், பருத்­தித்துறை – தும்­பளை ஊடாக வல்­லி­புர ஆழ்வார் கோயில், யாழ்ப்­பா­னம் – வல்­லி­பு­ர­கோ­வில் ஊடாக பருத்தித்துறை ஆகிய பாதை­க­ளில் சிறப்பு பஸ் சேவை­கள் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளன.

சமயக் கோட்­பா­டு­க­ளுக்­கும் கலா­சா­ரத்துக்கும் அமை­வாக அடியவர்கள் உடை­கள் அணிந்து தங்க ஆப­ர­ணங்­கள் அணி­வதை தவிர்த்து திரு­விழாக்­க­ ளில் கலந்­து­கொள்­ளு­மாறு ஆலய அறங்­கா­வ­லர்­சபை வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

 

You might also like