தீவு­களை வென்­றது இங்­கி­லாந்து

மேற்­கிந்­தி­யத் தீவு­க­ளுக்கு எதி­ரான முத­லா­வது ஒரு நாள் ஆட்­டத்­தில் இங்­கி­லாந்து அணி வெற்­றி­பெற்று, ஐந்து ஆட்­டங்­க­ளைக் கொண்ட தொட­ரில் 1:0 என்று முன்­னிலை வகிக்­கி­றது.

மன்­செஸ்­ட­ரில் நேற்­று­முன்­தி­னம் இந்த ஆட்­டம் நடை­பெற்­றது. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற மேற்­கிந்­தி­யத் தீவு­கள் அணி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர் மானித்­தது. மழை கார­ண­மாக ஆட்­டம் 42 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் கொண்­ட­தா­கக் குறைக்­கப்­பட்­டது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தி­யத் தீவு­கள் அணி 9 இலக்­கு­களை இழந்து 204 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக கோல்­டர் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 41 ஓட்­டங்­க­ளை­யும், கெய்ல் 37 ஓட்­டங்­க­ளை­யும், கோப் 35 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் ஸ்ரோக்ஸ் 3 இலக்­கு­க­ளை­யும், ரசிட், வோக்ஸ் இரு­ வ­ரும் தலா இரண்டு இலக்­கு­ க­ளை­யும், வில்லி, மொயின் அலி இரு­வ­ரும் தலா ஒரு இலக்­கை­யும் கைப் பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய இங்­கி­லாந்து 30.5 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 3 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. ஆரம்ப வீர­ரான பரிஸ்­ரௌவ் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 100 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். ரூட் 54 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

You might also like