பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் நவராத்திரி விழா

வவுனியா – பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் நவராத்திரி தினத்தை முன்னிட்டு அங்குள்ள வித்தியா விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி விழா இன்று காலை 7.30 மணிக்கு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

விழாவில் பூசை வழிபாடுகளுடன் சிறப்புச் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. மாணவ மாணவியர் குதூகலமாக நவராத்திரியை வரவேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

கல்லூரி இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் திருமதி கிருஸ்ணவேணி நந்தபாலன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்டச் சமூகசேவை உத்தியோகத்தரும் சொற்பொழிவளாருமான இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் ”நவராத்திரியின் பெருமை” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் மற்றும் பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

 

You might also like