இந்திய அணி முதலிடம் பிடித்தது

ஒருநாள் ஆட்டங்களுக்கான பன்னாட்டுத் தரப்படுத்தலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணி­க­ளுக்­கும் இடை­யி­லான ஐந்து ஆட்­டங்­க­ளைக் கொண்ட ஒரு­நாள் தொடர் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது.

முடி­வ­டைந்த முதல் மூன்று ஆட்­டங்­க­ளி­லும் இந்­திய அணி வெற்­றி­பெற்று தொட­ரில் 3:0 என்று முன்­னி­லை­யில் உள்­ளது. இந்­தத் தொடர் வெற்­றி­களை அடுத்து அந்த அணி தரப்­ப­டுத்­த­லில் முத­லி­டம் பிடித்­துள்­ளது.

இந்­திய அணி 120 புள்­ளி­க­ளு­டன் முத­லி­டத்­தில் உள்­ளது. தென்­னா­பி­ரிக்க அணி 119 புள்­ளி­க­ளு­டன் இரண்­டா­வது இடத்­தி­லும், ஆஸ்­தி­ரே­லிய அணி 114 புள்­ளி­க­ளு­டன் மூன்­றா­வது இடத்­தி­லும், இங்­கி­லாந்து அணி 113 புள்­ளி­க­ளு­டன் நான்­கா­வது இடத்­தி­லும், நியூ­சி­லாந்து111 புள்­ளி­க­ளு­டன் ஐந்­தா­வது இடத்­தி­லும் உள்­ளன.

ஆறு முதல் பத்து வரை­யி­லான இடங்­க­ளில் பாகிஸ்­தான், பங்­க­ளா­தேஷ், இலங்கை, மேற்­கிந்­தி­யத் தீவு­கள், ஆப் கா­னிஸ்­தான் ஆகிய அணி­கள் உள்­ளன.

You might also like