அரிசி இறக்குமதி செய்யத் தீர்மானம்

எதிர்வரும் சில மாதங்களுக்குள் 5 லட்சம் மெட்ரிக் தொன் அரசியை இறக்குமதி செய்ய தீமானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரிசி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சாதாரண சந்தையில் தற்போதுள்ள விலையிலும் பார்க்க குறைந்த விலையில் சதோசவில் இன்று தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில், அரசதலைவர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற, அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிடையில், அதிகரித்துள்ள தோங்காய் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், நுகர்வோருக்கு நேரடியாக தோங்காய்களை விற்பனை செய்ய இன்று தொடக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக வாகனங்கள் மூலம் தேங்காய்கள், பிரதேச ரீதியாக விநியோகம் செய்யப்படவுள்ளதாக தெங்கு விநியோக சபை தெரிவித்துள்ளது.

You might also like