காட்டலோனியாவில் பெரும் பதற்றநிலை

ஸ்பெய்னிடம் இருந்து பிரிந்து தனிநாடு கோரும் காட்டலோனியாவில் பரபரப்பான சூழ்நிலையில் நேற்றுமுன்தினம் பொது வாக்கெடுப்பு நடந்தது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக காட்டலோனியா திகழ்கிறது. வடகிழக்கு ஸ்பெயினில் செழிப்பான பகுதி, காட்டலோனியாதான்.

ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதமானோர் இங்கு வாழ்கிறார்கள். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இந்த மாகாணம்தான் செய்கிறது. ஸ்பெய்னின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் காட்டலோனியாவின் பங்கு 19 சதவீதம் ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அன்னிய நேரடி முதலீட்டில் 20.7 சதவீதம் இந்த மாகாணத்துக்குப் போகிறது. இந்த மாகாணத்தில் கூடுதல் சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஸ்பெய்ன் அரசியல் சட்டம் அதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.

அங்கு கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் தலையெழுத்தை தாங்களே நிர்ணயித்துக்கொள்வதற்காக சுய நிர்ணய அதிகாரம் (தனி நாடு) வேண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. பிரிந்து போவது தொடர்பான வாக்கெடுப்பும் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்புக்கு ஸ்பெய்ன் அரசு தடை விதித்ததால் பரபரப்பான சூழ்நிலை காட்டலோனியாவில் நிலவுகிறது.

You might also like