பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் அரசமைப்பு வேண்டாம்

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் ஒரே நாளில் சிங்­கள மற்­றும் தமிழ்த் தலை­வர்­கள் தெரி­வித்­தி­ருக்­கக்­கூ­டிய கருத்­துக்­கள் பல கேள்­வி­களை எழுப்­பு­கின்­றன. சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு வேண்­டி­யதை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும், தமி­ழர்­க­ளுக்கு வேண்­டி­யதை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் கூறி­யி­ருக்­கி­றார்­கள். ரணில் அனு­ரா­த­பு­ரத்­தி­லும் சம்­பந்­தர் மன்­னா­ரி­லும் பேசி­னார்­கள். அவை ஒவ்­வொன்­றும் ஒன் றுக்­கொன்று முரண்­ ­பாடான விட­யங்­க­ளைச் சொல்­கின்­றன.

அவர்­கள் சொல்­வது உண்­மை­யா­னால் பாம்­புக்­குத் தலை­யும், மீனுக்கு வாலும் காட்­டக்­கூ­டிய ஒரு வடி­வத்­தில்­தான் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டும் என்று கொள்­ள­வேண்­டும். அப்­ப­டி­யொரு அர­ச­மைப்பு முழு ஏமாற்று வேலை. அத­னால் இலங்கை மக்­க­ளுக்கு எந்­தப் பய­னும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. குறிப்­பா­கத் தமிழ் மக்­க­ளுக்கு எந்­த­வி­தத் தீர்­வும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.
புதிய அர­ச­மைப்பு ஒற்­றை­யாட்­சித் தன்­மை­யு­டன் அமை­யக்­கூ­டாது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறு­தி­யு­டன் தெரி­வித்­தி­ருந்­தது. அர­ச­மைப்­புக்­கான வழி­காட்­டல் குழு­வில் இது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு அதன் அடிப்­ப­டை­யி­லேயே இடைக்­கால அறிக்­கை­யில் அர­சின் தன்மை குறித்த விட­யம் மாற்­றப்­பட்­டது.

அதா­வது அது சிங்­க­ளத்­தில் “ஏக்­கிய ராஜ்­ஜிய’ என்­றும் தமி­ழில் ஒரு­மித்த நாடு என்­றும் குறிப்­பி­டப்­பட்­டது. இப்­படி இரு மொழி­க­ளி­லும் குறிப்­பி­டப்­பட்­டா­லும், பிரச்­சினை என்று வரும்­போது நீதி­மன்­றங்­கள் சிங்­கள மொழி­யின் பொரு­ளையே ஏற்­றுக்­கொள்­ளும் என்­கிற வாதம் தமி­ழர்­க­ளின் தரப்­பில் முன்­வைக்­கப்­பட்­ட­போது, அந்த வாக்­கி­யங்­க­ளுக்­கான பொருளை, ‘‘ஏக்­கிய ராஜ்­ஜி­ய ­‘ஒ­ரு­மித்த நாடு’ என்­பது பிரிக்­கப்­ப­டாத மற்­றும் பிரிக்­கப்­பட முடி­யாத நாடு என்­னும் பொரு­ளா­கும்’’ என்று தெளி­வா­கச் சொல்­லப்­பட்­டுள்­ளது.

ஆனால், அனு­ரா­த­பு­ரத்­தில் பேசிய ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ, ‘‘இடைக்­கால அறிக்­கை­யில் சிங்­கள மற்­றும் தமிழ்ப்பதங்­கள் ஒற்­றை­யாட்சி என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. இதில் எந் மாற்­றங்­க­ளும் இல்லை. ஆங்­கி­லத்­தில் ‘யுனிற்­ரரி’ என்ற வார்த்­ தையை உள்­ள­டக்­கு­வது குறித்து விவா­திக்­கப்­பட்டு வரு­கி­றது.

நாம் ஒற்­றை­யாட்­சிக்­குள்­ளேயே அதி­உச்ச அதி­கா­ரங்­களை வழங்­க­வுள்­ளோம். இடைக்­கால அறிக்­கை­யில் அது தெளி­வா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது’’ என்று தெரி­வித்­துள்­ளார்.

அதே­நா­ளில் மன்­னா­ரில் பேசிய சம்­பந்­தனோ, ‘‘வெளி­யா­கி­யுள்ள இடைக்­கால அறிக்­கை­யில் ஒற்­றை­யாட்சி, ‘யுனிற்­ரரி ஸ்ரேட்’ என்ற சொற்­கள் நீக்­கப்­பட்­டுள்­ளன. ‘ஏக்­கிய ராஜ்­ஜிய’ என்­ப­தற்­கான விளக்­க­மும் தெளி­வாக வழங்­கப்­பட்­டுள்­ளது’’ என விளக்­கம் அளித்­துள்­ளார்.

வழி­காட்­டல் குழு­வில் இது­வரை நடந்­த­வை­க­ளை­ உற்றுப் பார்க்கும்போது வெளிப் ­படை­யாக இடைக்­கால அறிக்­கையை வாசிக்­கும்­போ­தும் சம்­பந்­தன் சொல்­பவை உண்­மை­யா­னவை என்றே தோன்­று­கின்­றன. ஆனால், எதை எப்­ப­டிக் குறிப்­பிட்­டா­லும் கடை­சி­யில் அதை சிங்­கள, பௌத்­தம் தனக்­குச் சாத­க­மா­கவே திரித்­துப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் என்று பன்­னெ­டுங்­கா­ல­மா­கத் தமிழ் மக்­கள் கொண்­டி­ருக்­கும் அச்­சத்தை நிரூ­பிக்­கும் வகை­யில் ரணிலின் உரை அமைந்­தி­ருக்­கி­றது.

இப்­ப­டித் தகிடு தத்­தங்­களைச் சிங்­க­ளத் தலை­வர்­கள் செய்­வார்­கள் என்­ப­த­னா­லேயே உரு­வாக இருப்­பது கூட்­டாட்சி (சமஷ்டி) அர­ச­மைப்பு என்று தெளி­வா­கக் கூறத் தமி­ழர்­கள் தொடர்ந்து வலி­யு­றுத்தினார்கள். சிங்­கள, பௌத்த தலை­வர்­களை நம்­பித் தமி­ழர்­கள் காரி­ய­மாற்­று­வது இலங்­கை­யில் எப்போதும் சாத்தியமானது அல்ல என்­ப­தையே அவர்­கள் மீண்­டும் மீண்­டும் நிரூ­பித்து வரு­கின்­றார்­கள்.

எனவே இது­போல் சிங்­கள மக்­க­ளுக்கு ஒன்­றும், தமிழ் மக்­க­ளுக்கு ஒன்­று­மாக பாம்­புக்­குத் தலை­யும் மீனுக்கு வாலும் காட்­டக்­கூ­டிய அர­ச­மைப்பு முயற்­சி­க­ளை­விட்­டு­விட்டு குழப்­பம் இல்­லாத தெளி­வான வரை­ய­றை­யு­ட­னான அர­ச­மைப்பே உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும்.

You might also like