வடக்கு மாகாண விவசாயிகளின் பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு

வடக்கு மாகா­ணத்­தில் விவ­சா­யி­கள் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­கள் அடுத்­தாண்­டின் நிதி ஒதுக்­கீட்­டில் நிறை­வேற்­று­ வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று விவ­சாய அமைச்­சின் உத­வித் திட்­ட­மி­டல் பணிப்­பா­ளர் ஈ.சுரேந்­தி­ர­ நா­தன் தெரி­வித்­தார்.

இது­பற்றி அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­களை ஆரா­யும் வேலைத்­திட்­டம் மாவட்ட ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. கால்­நடை சம்­பந்­த­மான பிரச்­சி­னை ­க­ளும் ஆரா­யப்­ப­டு­கின்­றன.

வரு­டம்­தோ­றும் வறட்­சி­யால் கிண­று­கள் வற்­று­வ­தால் பயிர்­கள் அழி­வ­டை­கின்­றன. விவ­சா­யக் கிண­று­களை சீர­மைக்­க­வேண்­டும். 2020ஆம் ஆண்டு அரசு புகை­யிலை உற்­பத்­தியை தடை செய்­ய­வுள்­ளது. முதன்­மைப் பணப்­ப­யி­ரான புைகயிலை தடை­செய்­யப்­பட்­டால் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கும். எனவே சிறப்­பான மாற்­றுப்­ப­யிர்ச்­செய்கை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும்.

கால்­ந­டை­க­ளி­ட­மி­ருந்து பயிர்­க­ளைப் பாது­காக்க வேலி­களை அமைக்­க­வேண்­டும். இதற்கு மரக்­கட்­டை­களை வெட்­டு­வ­தற்கு வன­வள திணைக்­க­ளத்­தி­டம் அனு­மதி பெற்­றுத் தர­வேண்­டும்.

அத்­து­டன் பாலைப் பாது­காத்­துப் பதப்­ப­டுத்தி மாற்று உற்­பத்­தி­களை முன்­னெ­டுக்க வேண்­டும். இதற்கு நவீன உப­க­ரண வச­தி­க­ளும், பயிற்­சி­நெ­றி­க­ளை­யும் வழங்க வேண்­டும் – என்று விவ­சா­யி­கள் தமது பிர­தி­நி­தி­கள் ஊடாக கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ள­னர்.

இவை­தொ­டர்­பில் அமைச்சு ஆராய்ந்து அடுத்த ஆண்­டின் நிதி ஒதுக்­கீட்­டில் இவற்றை உள்­ள­டக்கி உரி­ய­தீர்வை வழங்­கும் – என்­றார்.

You might also like