ஜெய்யுக்கு வந்த சோதனை

இரண்டு நாளில் நடிகர் ஜெய்யை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸாருக்கு நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் ஜெய்யின் பலூன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில், கடந்த செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜெய் ஓட்டிச் சென்ற ஆடி சொகுசு கார் தாறுமாறாக ஓடி, சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. கார் மோதியது தெரிந்ததும் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அரை மயக்கத்தில் இருந்த நடிகர் ஜெய்யை மீட்டனர். அப்போது, அவருடன் நடிகர் பிரேம்ஜியும் உடனிருந்தார்.

ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது, வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது.

அதன் பிறகும் ஜெய் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் , அவரை இரண்டு நாளில் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

தவற விடாதீர்கள்:  கோக்லி -அனுஸ்கா திரு­ம­ண பந்தத்தில் இணைந்தனர்!!

You might also like