அணுவாயுதங்களின் உக்கிரத்தன்மையை உணர்ந்துகொள்ளவும்

அமெரிக்கா, வடகொரியாவுக்கு 'ஐ கான்' அமைப்பு எச்சரிக்கை

அணு ஆயுதங்கள் சட்டவிரோதமானது என்பதை உணரவேண்டுமென அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ‘ஐகான்’ அமைப்புத் தலைவர், அமெரிக்க மற்றும் வடகொரிய அதிபர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ‘ஐ கான்’ அமைப்பு தெரிவாகியுள்ளது. அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த 2007ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த ‘ஐ கான்’ அமைப்புடன் உலக நாடுகளில் அணு ஆயுதங்களை ஒழிக்கவும், அணு ஆயுதங்களால் ஏற்படும் மிகப்பெரிய பேரழிவைச் சுட்டிக்காட்டியும் விழிப்புணர்வு பரப்புரைகளில் இடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த அமைப்பின் தலைவர் பிட்ரைஸ், அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் சமீபகால நகர்வுகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ‘அணு ஆயுதங்கள் சட்டவிரோதமானவை. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என மிரட்டுவதும் சட்டவிரோதமானது. அணு ஆயுதங்களைச் சொந்தமாக வைத்துக்கொள்வதும், புதிதாக உருவாக்குவதும் சட்டவிரோதமானவைதான், அவற்றை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்’, என அவர் தெரிவித்தார்.

தவற விடாதீர்கள்:  ஈராக்­குக்கு அமெ­ரிக்கா பாராட்டு!!

You might also like