ஈராக் எங்கும் வெற்றிக் கொண்டாட்டங்கள்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்து நூறு சதவீதம் விடுபட்டுள்ளதை அடுத்து ஈராக் எங்கும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஈராக், சிரிய நாடுகளின் சில நகர்களைக் கைப்பற்றி அவற்றை ஒரு தனிநாடு என்று அறிவித்திருந்தது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு. அந்த அமைப்பின் பிடியில் இருந்த ஈராக்கின் முக்கிய நகரங்கள் இந்த வருடத்தின் மத்திய பகுதியில் மீட்கப்பட்டிருந்தன.

ஈராக்கின் ஹவியா நகரம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்தது. இந்த நகரை மீட்கும் போரை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கடும் முனைப்புடன் ஆரம்பித்தது ஈராக். இந்த நிலையில் ஹவியா நேற்றுமுன்தினம் முற்றுமுழுதுமாக ஈராக் படையின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹவீயா மீட்கப்பட்டதை அடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்து ஈராக் முழுவதுமாக விடுபட்டுள்ளது. இந்த வெற்றியை அடுத்து, பக்தாத், மோசூல் உள்ளிட்ட பல நகரங்களில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈராக்கிய மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தவற விடாதீர்கள்:  பிரிட்­ட­னில் கடும் பனிப்­பொ­ழிவு!!

You might also like