நிறைவேறியது நாக சைதன்யா-சமந்தா திருமணம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாயும், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தாவும் காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் காதலுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது.

அதையும் மீறி இருவரும் வாழ ஆரம்பித்ததால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று கோவாவில் உள்ள டபிள்யூ  என்ற 7 நட்சத்திர கடற்கரை விடுதியில் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. நள்ளிரவு 11.52 மணிக்கு சமந்தா கழுத்தில் நாக சைதன்யா தாலிகட்டினார்.

நாக சைதன்யா, சமந்தாவின் குடும்பங்களை சேர்ந்த 150 பேர் மட்டுமே திருமணத்துக்கு வந்து இருந்தனர். நடிகர்-நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. இருந்தாலும் பாடகி சின்மயி அவரது கணவரும், நடிகருமான ராகுலும் பங்கேற்றனர்.

நேற்று மாலை 3 மணிக்கு சமந்தாவுக்கு மருதாணி சடங்குகள் நடந்தன.
நாகசைதன்யாவின் பாட்டி ராஜேஸ்வரி புடைவையை நவீன வேலைப்பாடுகளுடன் புதுப்பித்து திருமண புடைவையாக சமந்தா உடுத்தி இருந்தார்.

தவற விடாதீர்கள்:  கோக்லி -அனுஸ்கா திரு­ம­ண பந்தத்தில் இணைந்தனர்!!

சமந்தா கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர் என்பதால் இன்று மாலை கோவாவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்கவிருக்கிறது.

 

 

You might also like