அச்சத்தில் உலகின் பாதுகாப்பு

அமெ­ரிக்­கா­வின் ‘லொஸ் வெகாஸ்’ தாக்­கு­தல் பெரும் அதிர்­வ­லை­களை உல­கெங்­கம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில் எத்­துணை நவீன தொழில்­நுட்ப பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளை­யும் நம்ப இய­லாத சூழ்­நிலை தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தத் தாக்­கு­த­லா­னது 2011ஆம் ஆண்டு இரட்­டைக் கோபு­ரத் தாக்­கு­த­லைப் போன்று எதிர்­பா­ராத நிலை­யில்– எதிர்­பா­ராத வித தாக்­கு­தல் அல்ல. தலி­பான்– அல்­கெய்தா போன்ற தீவி­ர­வாத இயக்­கங்­க­ளின் செயற்­பா­டுகள் பின்­லே­ட­னின் மறை­வுக்­குப் பின் இல்­லாது அல்­லது குறைந்து போன நிலை­யி­லும் அதை­விட பயங்­க­ர­மான சக்­தி­யான ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்­பின் அதி­வேக வளர்ச்சி அமெ­ரிக்க உட்­பட மேற்­குல நாடு­களை பெரி­தும் அச்­சு­றுத்தி வந்­தது.

எனி­னும் தற்­போது ஈராக், சிரிய நாடு­க­ளில் அவர்­க­ளின் ஆதிக்­கம் வெகு­வா­கக் குறைந்­துள்ள போதி­லும் மேற்கு நாடு­களை தாக்­கும்– அச்­சு­றுத்­தும் பலத்­தில் குறை­வில்லை என்­ப­தையே மேற்­படி லொஸ் வெகாஸ் தாக்­கு­தல் குறிப்­பு­ணர்த்தி நிற்­கி­றது.

ஏற்­க­னவே பிரான்­ஸி­லும் அமெ­ரிக்­கா­வி­லும் பொது­மக்­கள் பெரு­ம­ள­வில் கூடும் நிகழ்­வு­க­ளில் இது­போன்ற துப்­பாக்­கிச் சூட்டுத் தாக்­கு­தல்­கள் நிகழ்ந்­துள்ள நிலை­யில் புல­னாய்­வுத் திறன் மிக்க அமெ­ரிக்க புல­னாய்­வுத்­து­றை­யின் கண்­க­ளில் மண்­ணைத் தூவி விட்டு ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட மக்­க­ளைக் கொன்று 400 இற்­கும்­மேற்­பட்ட மக்­களை காயப்­ப­டுத்­து­ம­ள­விற்கு தமக்­குப் பலம் உண்­டென்­பதை தாக்­கு­த­லா­ளி­கள் நிரூ­பித்­துள்­ள­னர்.

இந்­தத் தாக்­கு­தல் நிச்­ச­யம் அமெ­ரிக்கா உட்­பட மேற்­கு­லக மக்­க­ளின் நிம்­ம­தியை பெரி­தும் கேள்­விக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. அதே­ நே­ரம் வட­கொ­ரி­யா­வி­னால் அமெ­ரிக்­கா­வுக்­குப் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல் ஏது­மில்லை. எனவே வரட்­டுப் பிடி­வாத வரட்­டுக் கெள­ரவ இழு­பறி நிலையை முடி­வுக்­குக் கொண்­டு­வந்து ஒட்­டு­மொத்த உல­கும் எதிர்­கொள்­ளும் ஐ.எஸ்.ஐ.எஸ். குழு­வின் அச்­சு­றுத்­தலை உலக நாடு­க­ளின் அமை­தியை கருத்­திற்­கொண்டு முடி­வுக்­குக் கொண்டு வர­வேண்­டும்.

அமெ­ரிக்­கா­தான் ஆயுதக்குழுக்களை உரு­வாக் கிய­தான குற்­றச்­சாட்­டும் உண்டு. விதைத்தவனே அறு­வடை செய்­வான் என்ற கூற்­றுப்­படி சமீ­பத்­திய நிகழ்­வு­ களை நோக்­கி­னா­லும் ஆயு­த­தா­ரி­ க­ளின் அர­சு­க­ளின் ஏட்­டிக்­குப் போட்­டி­யான தாக்­கு­தல்­க­ளில் ஏதும் அறியா அப்பாவி மக்கள் சாவடைவது மிக வேதனைக் குரியது.

வடபுலத்தான்.

You might also like