கட்டலோனியா பிரிந்து செல்ல எதிர்ப்புத் தெரிவித்துப் பேரணி

கட்டலோனியா தனிநாடாக பிரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெய்னின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு நேற்றுமுன்தினம் பேரணிகளை நடத்தியுள்ளனர்.

ஸ்பெய்னின் முக்கியமான பொருளாதார வல்லமை மிகுந்த கட்டலோனியா, ஸ்பெய்னில் இருந்து பிரிந்து தனிநாடாவது தொடர்பில் கடந்த முதலாம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90 வீதமானவர்கள் கட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கு ஸ்பெய்ன் அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கட்டலோனியா பிரிய வேண்டும் என்று வலியுறுத்தி பேரணிகள் நடத்தப்படும் நிலையில், பிரியக்கூடாது என்றும் வலியுறுத்தி நேற்றுமுன்தினம் சில பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.

தவற விடாதீர்கள்:  அர­புக் கூட்­ட­மைப்பு அமெ­ரிக்­கா­வுக்கு கண்­டனம்!

You might also like