புடினுக்கு எதிராகப் போராட்டங்கள்

ரஷ்யாவில் அந்த நாட்டு அதிபர் புடினுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை பரவலாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. புடின் கடந்த சனிக்கிழமை தனது 65ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இந்த நிலையில் அன்றைய தினமே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டமை கவனிக்கத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சிக்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. புடினின் சொந்த நகரான செயின்ட் பீற்றர்ஸ்பேர்க், ரஷ்யத் தலைநகர் மொஸ்கோ ஆகியவற்றில் போராட்டங்கள் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. ரஷ்யாவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. புடின், அலெக்சி இருவருக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது.

தவற விடாதீர்கள்:  அமெ­ரிக்­கா­வின் முடிவு முற்­றி­லும் தவ­றா­னதே!

You might also like