சூடான் மீதான தடையை நீக்குகிறது அமெரிக்கா

சூடான் மீதான 20 ஆண்டுகால வர்த்தகத் தடையை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு சூடான் வரவேற்புத் தெரிவித்தது.

தீவிரவாதத்துக்கு உதவுகிறது என்று தெரிவித்து ஆபிரிக்க நாடான சூடான் மீது 20 ஆண்டுகள் வர்த்தகத் தடையை அந்த நாட்டின் மீது அமெரிக்கா விதித்திருந்தது. இந்த நிலையில் சூடான் மீதான தடை நீக்கும் முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது தொடர்பில் சூடான் அயலுறவுத்துறை அமைச்சர் சினுவா வெளியிட்ட செய்தியில், ‘சூடான் மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடையை நீக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவை சூடான் தலைவர்களும், மக்களும் வரவேற்கிறோம். வெளிப்படையான பேச்சுக்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் விலகும். அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான உறவு வைத்து கொள்ள சூடான் ஆவலாக உள்ளது. அதற்கு உடனடியாக தீவிரவாதத்தை உதவும் நாடுகளின் பட்டியலிலிருந்து சூடானை அமெரிக்கா நீக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

தவற விடாதீர்கள்:  பிரி­வ­தற்­காக 1,050,000 கோடி ரூபா வழங்க பிரிட்­டன் தயார்!!

You might also like