50,000 புத்தகங்களுடன் விடுதி இந்த அற்புதம் போர்த்துக்கலில்

போர்த்துக்கலின் ஓபிடோஸ் நகரில் உள்ளது ‘தி லிட்ரரி மன் ஹொட்டல்’. இங்கு சுமார் 50 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விடுதி, உலகின் மிகச் சிறந்த விடுதி என்று புத்தகப் பிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 30 அறைகள் கொண்ட இந்த விடுதியில் கூடம், அறைகள், மாடிப் படிகள், சுவர்கள் என்று எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. வசதியான நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன.

நாவல்கள், கவிதைகள், வாழ்க்கை வரலாறு, சமையல் என்று பல விதமான புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால் அதை முடிக்காமல் வைக்க முடியாது. அதற்காக இன்னொரு நாள் தங்கவும் நேரிடலாம். புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிச் செல்லலாம்.

‘அரிய புத்தகங்கள் என்றால் 35 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கும். எங்கள் அறையில் தங்குவதற்கு பெரியவில் கட்டனம் அறவிடுவதில்லை. (இலங்கை மதிப்பில் 13ஆயிரம் ரூபா) இன்னொரு நாள் தங்கிப் படித்துவிட்டுச் செல்வது செலவு குறைந்தது. இங்கே வரும் வாடிக்கையாளர்கள் கூட எங்களுக்கு நன்கொடையாகப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள். அதனால் விரைவில் ஒரு லட்சம் புத்தகங்களை எட்டி விடுவோம் என்று நம்புகிறோம். எங்களைப் போன்ற விடுதிகள் பல நாடுகளிலும் இருக்கின்றன.’ என்கிறார் விடுதியின் உரிமையாளர்.

தவற விடாதீர்கள்:  அமெ­ரிக்­கா­வின் முடிவு முற்­றி­லும் தவ­றா­னதே!

You might also like